×

நாளை அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்: இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். இந்தியா, அமீரகம் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி நாளை அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.

27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோயில், வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அபுதாபியில் வாழும் இந்திய மக்களை சந்தித்தும் உரையாற்றுகிறார். கடந்த 8 மாதங்களில் 3ஆவது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுமுறை பயணம் செய்கிறார். 2015ஆம் ஆண்டில் இருந்து 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

The post நாளை அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்: இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Abu Dhabi ,Modi ,United Arab Emirates ,Delhi ,Narendra Modi ,Mohammed bin Saeed ,India ,UAE ,PM Modi ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!