×

மார்த்தாண்டத்தில் பைக் விபத்தில் வாலிபர் காயம்

மார்த்தாண்டம் பிப். 13: மார்த்தாண்டத்தில் பைக் விபத்தில் வாலிபர் காயம் அடைந்தார் காட்டாத்துறையை சேர்ந்தவர் அப்துல்சர்தார் (25). இவர் சிராயன்குழியில் ஜூஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அப்துல்சர்தார் பைக்கில் மார்த்தாண்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக், அப்துல்சர்தார் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந் அப்துல்சர்தாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மார்த்தாண்டத்தில் பைக் விபத்தில் வாலிபர் காயம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Marthandum ,Abdul Sardar ,Kattathura ,Sirayankuzhi ,Abdulsardar ,Dinakaran ,
× RELATED விஜய் வசந்த், தாரகை கத்பர்ட் வெற்றி திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்