×

மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 3வது நாளாக உண்ணாவிரதம்: மகாராஷ்டிரா அரசு பிரச்னையை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு

ஜால்காவ்: மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீட்டு பிரச்னையை மாநில அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார். மராத்தா இனத்தினருக்கு குன்பி சான்றிதழ் வழங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி குன்பி சான்றிதழ் பெற்ற மராத்தாக்கள் ஆதாரம் காட்டினால் அவர்களுக்கு குன்பி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 57 லட்சம் மராத்தாக்கள் குன்பி சான்றிதழ் பெற தகுதி உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில், மராத்தாக்கள் சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரம் இருந்து வருகிறார். நேற்று அவர் கூறுகையில்,‘‘ மகாராஷ்டிரா அரசு மராத்தாக்களின் இட ஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீர்வு காணாமல் இழுத்தடிக்கிறது. குன்பிக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 57 லட்சம் மராத்தாக்களுக்கும் உடனடியாக குன்பி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார். இட ஒதுக்கீட்டு பிரச்னையில் ஜராங்கே உண்ணாவிரதம் இருப்பது இது நான்காவது முறையாகும்.

The post மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 3வது நாளாக உண்ணாவிரதம்: மகாராஷ்டிரா அரசு பிரச்னையை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Marathas ,Maharashtra government ,Jalgaon ,Manoj Jarange ,
× RELATED அதபற்றி பேச அவங்களுக்கு ரொம்ப பயம்...