×

ஏடிபி தரவரிசை முதல் முறையாக டாப் 100ல் நாகல்

துபாய்: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் சுமித் நாகல், தரவரிசையில் முதல் முறையாக டாப் 100ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். நுங்கம்பாக்கம், எஸ்டிஏடி டென்னிஸ் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த பைனலில் இத்தாலியின் லூகா நார்டியை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நாகல், ஏடிபி சேலஞ்சர் தொடர்களில் தனது 5வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, நேற்று வெளியான ஏடிபி ஒற்றையர் தரவரிசை பட்டியலில் நாகல் முதல் முறையாக டாப் 100ல் இடம் பிடித்துள்ளார். அவர் ஒரேயடியாக 23 இடங்கள் முன்னேறி 98வது ரேங்க் பெற்றுள்ளார். முன்னதாக, பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 2019ல் டாப்-100ல் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் நாகலுக்கு கிடைத்துள்ளது.

The post ஏடிபி தரவரிசை முதல் முறையாக டாப் 100ல் நாகல் appeared first on Dinakaran.

Tags : Nagel ,Dubai ,Sumit Nagal ,Chennai Open ATP Challenger ,Nungambakkam ,STAD ,Nagal ,ATP ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...