×

சில்லி பாயின்ட்…

* 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் உசைன் ஷான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
* காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கே.எல்.ராகுல் ராஜ்கோட்டில் நடக்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.
* ராஜஸ்தான் அணியுடன் ஜாம்ஷெட்பூரில் நடக்க உள்ள ரஞ்சி லீக் போட்டியுடன் தொழில் முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜார்க்கண்ட் வீரர் சவுரவ் திவாரி (34 வயது) அறிவித்துள்ளார்.
* இமாச்சல் அணியுடன் நடந்த ரஞ்சி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 76 ரன் வித்தியாசத்தில் வென்றது. கேரளா 109 ரன் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Najmul Usain Shanto ,Bangladesh ,KL Rahul ,Rajkot ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 தொடர்: இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்