×

குப்பைகளில் தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாடு

 

வருசநாடு, பிப். 13: கண்டமனூர் அருகே குப்பைகளில் தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கண்டமனூர் கிராமம் புதுக்குளம் கண்மாய் செல்லும் சாலை பகுதிகளில் தினந்தோறும் கண்டமனூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த குப்பைகளில் தீ வைத்து எரிப்பதால் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் புகைமூட்டத்தால் விபத்தில் சிக்கும் சூழலும் உள்ளது. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் சுவாச பிரச்னைகளும் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுகுறித்து பல முறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டமனூர் கிராமவாசிகள் கூறுகையில், ‘‘சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் கண்டமனூர் கணேசபுரம் சாலையில் உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

துர்நாற்றம் கழிவு புகைகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது . இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை கழிவுகளை வேறு இடங்களுக்கு மாற்றி மக்கும் உரங்களாக மாற்றப்பட வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைக்க கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

The post குப்பைகளில் தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாடு appeared first on Dinakaran.

Tags : Kandamannur ,Kandamore ,Puthkulam Kannmai ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...