×

நயினார்கோவில் வட்டாரத்தில் பல்துறை விளக்க சிறப்பு முகாம்

பரமக்குடி,பிப்.13: நயினார்கோவில் வட்டார வேளாண்மைத் துறை சார்பாக, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்துறை சிறப்பு முகாம் ராதாபுளி கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் தலைமையில் வகித்து பேசுகையில், கலைஞர் திட்டத்தில் தரிசாக உள்ள நிலங்களின் முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வரவேண்டும்.

உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டும். பல்வேறு துறைகளில் கலைஞர் திட்ட பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெற விண்ணப்பிக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள் மூலம் தற்போது பயிர் கடன் வழங்கப்படுகிறது என்றார்.

வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் பானுபிரகாஷ், கலைஞர் திட்டத்தில் தென்னங்கன்றுகள், ஜிப்சம்,வேளாண் உப கரணங்கள், பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள், தார்பாலின் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார். உதவி பொறியாளர் மதன்குமார், பண்ணை குட்டை அமைத்தல் கிராமத்து ஊரணி தூர் வாருதல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்தல் பற்றி விளக்கினார்.

வேளாண் இடுபொருட்கள் உயிர் உரங்கள் விசை தெளிப்பான்கள், உளுந்து விதைகள் வழங்கப்பட்டது. உயிர் உரம் ,உழவன் செயலி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் லாவண்யா உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி தொழில் நுட்ப அலுவலர் ஜெயபிரியா நன்றி கூறினார்.

The post நயினார்கோவில் வட்டாரத்தில் பல்துறை விளக்க சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Nainarkoil ,Paramakkudy ,Nainarkoil District Agriculture Department ,Radhapuli ,Deputy Director ,Bhaskaramanian ,
× RELATED நான்கு மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்: பணியாளர்கள் கோரிக்கை மனு