×

முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மனு

 

மதுரை, பிப். 13: மதுரையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் பாஜகவினர் மனு அளித்தனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட பாஜ தலைவர் மகா.சுசீந்திரன் ஆலோசனையின் பேரில், வக்கீல் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்கள் கலெக்டர் சங்கீதாவிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சொந்தமான வீடு மாநகராட்சியின் 35வது வார்டில் செண்பகதோட்டம் எச்.ஐ.ஜி குடியிருப்பில் உள்ளது. அந்த வீட்டின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, வீட்டில் இருந்து மின்சார இணைப்பு கொடுத்து ரூம்களாக பிரித்துள்ளார். எனவே, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madura ,R. B. ,BJP ,Udayakumar ,Madurai Collector's Office ,Baja ,Dinakaran ,
× RELATED மதுரையில் மாஜி அமைச்சர் ஆர்.பி....