×

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் ஒரே நாளில் 563 பேர் பதிவு

 

தொண்டாமுத்தூர், பிப்.13: கோவை அருகே ஆலாந்துறை பேரூராட்சி சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்தல், புதிதாக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்குதல், சிறு, குறு தொழில் துவங்க கடன் விண்ணப்பம் வழங்கும் முகாம் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முகாமை துவக்கி வைத்தார். ஆலாந்துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை இராமமூர்த்தி குத்து விளக்கு ஏற்றினார். நகர செயலாளர் ஏ.கே ரங்கசாமி வரவேற்று பேசினார்.

முகாமில், திமுக ஒன்றிய செயலாளர் சாமி பையன் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, பி.ஆர்.வேலுச்சாமி பெருமாள் ராஜா, வினோத், பாபுராஜ், ராஜ்குமார், ரமேஷ், ஏஎம்பி கிருஷ்ணன், மீனவரணி ராஜேந்திரன், சண்முகராஜ், துணைத்தலைவர் மூர்த்தி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, அமுதா ரவி, சரஸ்வதி, அம்பிகா செல்வம், சாமியப்பன், அனிதா வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 175 பேரும், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 133 பேர் உட்பட 563 பேர் முகாமில் பயனடைந்தனர்.

The post முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் ஒரே நாளில் 563 பேர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Thondamuthur ,Coimbatore ,Alandrai Municipality ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...