×

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

 

திண்டுக்கல், பிப். 13: திண்டுக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து 254 மனுக்களை பெற்றார். தொடர்ந்து கலெக்டர், அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பேருக்கு தலா ரூ.13,349 மதிப்பிலான திறன் பேசி மொத்தம் ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டிலும், 2 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள், 2 பேருக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாவட்ட ஆட்சியரின் ராணி, தனித்துணை ஆட்சியர் கங்கா கவுரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Dindigul Collector ,People's Grievance Day ,Dindigul ,Collector ,Poongodi ,day ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்