×

மன்னார்குடியில் 15ம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம்

திருவாரூர், பிப்.13: திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி படித்து வரும் மாணவர்களுக்கான கல்வி கடன் சிறப்பு முகாம் வரும் 15ம் தேதி மன்னார்குடியில் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி படித்து வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும் 15ம் தேதி காலை 10 மணியளவில் மன்னார்குடியில் இயங்கி வரும் ஏ. ஆர். ஜெ. பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. இதில் வங்கியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post மன்னார்குடியில் 15ம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Tiruvarur ,Collector ,Charu ,
× RELATED மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி