- திருக்காட்டுப்பள்ளி
- பூதலூர் ரயில்வே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- மாரனேரி ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி
- சிலம்பம்
- அச்சுதன் சாய்
- ரயிலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி, பிப்.13: பூதலூர் ரயிலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாரநேரி ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே ரயிலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவன் அச்சுதன் சாய், மாணவி கேசிகா ஆகியோர் 7 மற்றும் 10 வயதிற்குட்பட்ட பிரிவில் தஞ்சை அன்னை சத்தியா விளையாட்டு அரங்கில் தமிழன் சிலம்பாட்ட கழகம், பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய சிலம்ப போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனர்.
அதேபோன்று மார நேரி ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் படிக்கும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி ப்ளஷி, மற்றும் மெஜஸ்டி ஆகியோர் ஒற்றை கம்பு வீச்சு போட்டியில் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றமைக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் மணிமாறன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
The post சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவர் அசத்தல் appeared first on Dinakaran.