×

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் 12 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளகாகிதபுரம் சாலையை புதுப்பிக்க வேண்டும்

கரூர், பிப். 13: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் கடந்த 12 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் சுங்கசாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடியின் எல்லை சுக்காலியூரில் இருந்து 41 கிமீ குளித்தலை வரை உள்ளது. ஆனால், 25 கிமீ மாயனூர் வரைதான் நான்கு வழிச்சாலைகள் உள்ளன. முழுமையாக நான்கு வழிச்சாலை போடாமல் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அந்த சுங்கசாவடி நிறுவனம், முழுமையாக நான்கு வழிச்சாலை அமைத்துதான் கட்டணம் வசூல் செய்வதாக தவறான அறிக்கையை கொடுத்து ஒப்புதல் பெற்றிருக்கிறது. நடைமுறையில் நான்கு வழிச்சாலை முழுமையாக அமைக்காமலேயே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் ஈரோடு ரோடு குட்டை கடையில் இருந்து ஆலம்பாளையம் பழமாபுரம், தாதம்பாளையம் வழியாக செல்லும் காகிதபுரம் சாலை கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது. அந்த சாலையை புதுப்பிக்க வேண்டும். கரூர் மாவட்டம் கரூர் பாளையம் ரோடு வெங்ககல்பட்டியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் இருபுறமும் சாலையை அகலப்படுத்தி விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தனர்.

The post போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் 12 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளகாகிதபுரம் சாலையை புதுப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Unakakithapuram ,Karur ,People's Grievance Day ,Karur District Collector ,Kongu Nadu People's National Party ,Karur Trichy National Highway Manavasi ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...