×

ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல்

ராஞ்சி;ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அங்கு நில மோசடி தொடர்பாக வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜன.31ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். நேற்று அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மேலும் 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதற்கிடையே அமலாக்க இயக்குனரகத்திற்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்று ஒருங்கிணைந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யஅமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல் appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Ranchi ,Jharkhand ,Chief Minister ,Hemant Soren ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் பேரவை இடைதேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி வேட்புமனு