×

பாஜவுக்கு 370 என்டிஏவுக்கு 400 அடித்துச்சொல்கிறார் அமித்ஷா

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகராட்சியில் ரூ.1950 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில், முதல் 5 ஆண்டுகள் ​​எதிர்க்கட்சிகள் தோண்டிய குழியை நிரப்புவதில் கழிந்து விட்டன. அடுத்து வந்த 5 ஆண்டுகள் வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டன.

அவரை மூன்றாவது முறையாக பிரதமராக்குங்கள். அவர் எழுப்பும் அஸ்திவாரத்தில் ஒரு அற்புதமான கட்டிடம் மிக வேகமாக வரும். நான் நேற்றுமுன்தினம் கர்நாடகாவில் இருந்தேன். ஜனவரியில் 11 மாநிலங்களுக்குச் சென்றேன். மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து எந்த மாநிலத்திலும் சஸ்பென்ஸ் இல்லை. பாஜ 370 இடங்களைப் பெறும் என்ற மனநிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பெறும்.

2014 ல் மோடியை நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தது ‘குஜராத் மாதிரி’. இப்போது 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, 2047ல் இந்தியா உலகில் முதலிடத்தை எட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒரு திட்டத்தை வகுத்து, கடின உழைப்புடன் செயல்படுத்தும் திறன் பிரதமர் மோடிக்கு உள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து உலக அளவில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்து நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாஜவுக்கு 370 என்டிஏவுக்கு 400 அடித்துச்சொல்கிறார் அமித்ஷா appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,NDA ,Baja ,Ahmedabad, Gujarat ,Union ,Minister ,Modi ,BJP ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!