- ஆரணி
- தொடக்க விவசாய கூட்டு கடன் சங்கம்
- முதையூர் ஊராட்சி,
- திருவண்ணாமலை மாவட்டம்
- போளூர்
- Velumani
- தின மலர்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த முடையூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 9ம் தேதி மாலை சங்க செயலாளர் வேலுமணி மற்றும் ஊழியர்கள் பணியை முடித்து கொண்டு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை வந்தபோது சங்க அலுவலகத்தில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள லாக்கர்களை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்றது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நகைகள் மற்றும் பணம் வைத்துள்ள இரும்பு லாக்கரை வெல்டிங் மெஷின் மூலம் உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டுள்ளனர். இதனால், லாக்கரில் வைத்திருந்த ரூ.5.50 கோடி மதிப்பு நகைகள் மற்றும் பணம் தப்பியது.
The post கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி ரூ.5.50 கோடி நகைகள் பணம் தப்பியது appeared first on Dinakaran.