×

பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம் கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா? அமைச்சர் சிவசங்கர் சவால்

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். போக்குவரத்து துறை சார்பில் தற்போதைய நிலையில் 199 புதிய பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. இதுதவிர, 4 ஆயிரம் பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் வாங்கப்பட உள்ளது. சென்னைக்கு 100 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சமீபத்தில் முதல்வர் 100 பேருந்துகளை தொடங்கி வைத்தார். கலைஞர் முதல்வராக இருந்த போது 15 ஆயிரம் பேருந்துகளும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 10 ஆயிரம் பேருந்துகளும் வாங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் வெறும் 3,600 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஜெயலலிதா போல 10 ஆயிரம் பேருந்துகளையாவது எடப்பாடி வாங்கி இருக்கலாம். தற்போதைய நிலையை ஏற்படுத்தியவர் எடப்பாடிதான்.

ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வரானபின் கொரோனா காலம் தவிர்த்து ஒன்றரை ஆண்டில் 4 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

ஆசியாவிலேயே சிறந்த பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்கி வருகிறது. குற்றச்சாட்டை முன்வைக்கும் எடப்பாடி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வர தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர்பாபுவும் உடன் வருகிறோம் பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகளை சுற்றிக்காட்ட தயாராக உள்ளோம் அவர் வர தயாரா? கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தவறான புகாரை தெரிவித்து மக்களை குழப்பி ஆதாயம் தேட வேண்டாம்.

The post பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம் கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா? அமைச்சர் சிவசங்கர் சவால் appeared first on Dinakaran.

Tags : EPS ,Klambach ,Minister ,Sivashankar ,Chennai ,Transport Minister ,Sivasankar ,Edappadi Palaniswami ,Klambakkam ,station ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...