×

குன்றத்தூரில் கோயில் இடத்தில் மண்டபம் கட்டி அறங்காவலர் முறைகேடு: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு

காஞ்சிபுரம்: கோயில் இடத்தில் மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு வழங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ மேத்தா நகரில், சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் அறங்காவலர் இந்த கோயில் அருகே உள்ள களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டி பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடமும், வருவாய்த்துறையிடமும் முறையிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அறங்காவலர் பத்மநாபன் என்பவர் விசாரணைக்கு வரும் அதிகாரிகளிடம் பொதுமக்களிடமும் மண்டபம் கோயிலுக்கு சார்ந்த இடம் என்றும் கோயில் ராஜகோபுரமும் களம் புறம்போக்கு இடத்தில் இருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அகற்றினால் கோயில் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என பொய்யான தகவலை பரப்பி வருகிறார். எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிடப்பட்டுள்ள இடம் அரசு புறம்போக்கு எனவும் அந்த கட்டிடத்தை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதியும் படிவம் 6 வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் வழங்கியும் இதுவரை ஆக்கிரமிப்பு, அகற்றப்படாமல் இருப்பதாக கூறி மீண்டும் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டத்`திற்கு 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் வந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மீண்டும் மனு கொடுத்து அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

The post குன்றத்தூரில் கோயில் இடத்தில் மண்டபம் கட்டி அறங்காவலர் முறைகேடு: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kanchipuram ,Sri Mehta Nagar ,Kunradthur, Kunradthur district, ,Kanchipuram district ,Shiva ,Kunradthur ,Dinakaran ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை