×

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 30,992 அரசு தொடக்க பள்ளிகளில் 16.85 லட்சம் மாணவர்கள் பயன்

நாட்டிலேயே பல முன்னோடி நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நம் மாநிலத்தின் மாபெரும் மரபின் தொடச்சியாக இந்த அரசின் முன்னோடித் திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ தெலங்கானா மாநிலம் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முதல் ஆறு மாத காலத்திற்கு 1,543 பள்ளிகளில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைக்கு பிறகு இத்திட்டம் மாநிலத்தில் உள்ள 30,992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 16.85 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஊட்டச்சத்து உயர்வது மட்டுமின்றி மாணவர்களின் வருகைப் பதிவும், கற்றல் விளைவுகளும் மேம்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான உழைக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களின் சுமைகளை இந்த அரசு பகிர்ந்து கொள்வதால் பெண்களின் சமூக மேம்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.

The post முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 30,992 அரசு தொடக்க பள்ளிகளில் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Telangana ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...