×

பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் உள்ள அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், விடியங்காடு, ராஜாநகரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் வியாபாரிகளிடமிருந்து நூல், பாவு பெற்று லுங்கி உற்பத்தி செய்து, மொத்த வியாபாரிகளிடம் மீட்டர் கணக்கில் கூலி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் லுங்கி மீட்டர் ஒன்றுக்கு ரூ.10 வழங்க வேண்டும், மாதம் ஒருமுறை கூலி வழங்க வேண்டும், 60 வயது நிரம்பிய நெசவாளர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நெசவாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. மேலும் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அம்மையார் குப்பம் ஊராட்சியிலும் விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pallipatta ,RK Pettah ,Pallipat ,Ammaiyarkuppam ,Pothatturpet ,Atthimancherippet ,Sorakaipettai ,Vanganur ,Srikalikapuram ,Vidiangadu ,Rajanagaram ,Pallippattu ,RK Pettai ,Thiruvallur district ,
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்