×

இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு ‘ரீல்’ வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது நடவடிக்கை: கர்நாடகா மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு

பெங்களூரு: இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு ‘ரீல்’ வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது கர்நாடகா மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலம் கடாக் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், மருத்துவமனை வளாகத்தில் ரீல் வீடியோ எடுத்து வெளியிட்டனர். அந்த வீடியோவில் இந்தி மற்றும் கன்னட திரைப்பட பாடல்களுக்கு மாணவர்கள் ஆட்டம் போட்டனர். இந்த வீடியோ வைரலானதால் 38 மருத்துவ மாணவர்களுக்கு எதிராக மருத்துவ அறிவியல் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குனர் பஸ்பராஜ் கூறுகையில், ‘மருத்துவமனை வளாகத்தின் நடைபாதையில் ரீல் வீடியோ எடுத்து வெளியிட்ட 38 மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல், மருத்துவமனைக்கு வெளியே மாணவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் விதிமுறைகளை மீறி ரீல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது 38 மாணவ மருத்துவர்களுக்கும் ஹவுஸ்மேன்ஷிப் பயிற்சி 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இருந்தும் விரைவில் பட்டமளிப்பு விழா வரவுள்ளதால், இந்தி மற்றும் கன்னட பாடல்களுக்கு ஆட்டம் போட்டு பார்த்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஆபரேஷன் தியேட்டருக்குள் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுத்த மருத்துவரை கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சஸ்பெண்ட் செய்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தற்போது மருத்துவக் கல்லூரியில் ரீல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு ‘ரீல்’ வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது நடவடிக்கை: கர்நாடகா மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka Medical College ,Bengaluru ,Karnataka ,Cuttack Medical College ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி