×

பிரதமர் மோடிக்கு வாக்குறுதிக்கான பத்தாம் ஆண்டு நினைவு நாள் வாழ்த்துக்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: கருப்பு பணத்தை ஒழித்து சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவூட்டும் விதமாக பிரதமர் மோடிக்கு வாக்குறுதிக்கான பத்தாம் ஆண்டு நினைவு நாள் வாழ்த்துக்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் வலைதள பதிவில்;
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்‌பிற்கு ஆர்பிஐ (RBI)செலவு செய்த பணம் 13000 கோடி. ஆனால் முடிவில் 99.3 சதவீதம் பணம் வங்கிகளுக்கே திரும்பி விட்டது. இந்தப் படுதோல்வி முன்னெடுப்பால் இந்தியாவின் மொத்த உற்பத்தி 1.5 சதவீதம் ஆக குறைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு வரிசையில், மருத்துவத்திற்கு செலவிடவும் முடியாமல் உயிர் இழந்தனர். தினசரி கூலியை நம்பி இருந்த கோடிக்கணக்கான நடுத்தர/ஏழை மக்கள் பல வாரங்களுக்கு மேலாக தங்கள் ஊதியங்களை பெற முடியாமல் நடுத்தெருவில் திண்டாடினார்கள்.

எது எப்படி இருந்தாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முலம் பெரும் நிறுவனங்களின் நன்கொடையை பெற்று இந்தியாவின் முதல் பணக்கார கட்சியாக மாறியதற்கும்(சொத்து மதிப்பு-6046.81 கோடி), கருப்பு பணத்தை ஒழித்து சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்களுக்கு லட்ச லட்சமாக கொடுத்தற்கும் மோடி அவர்களுக்கு இந்த வாக்குறுதிக்கான பத்தாம் ஆண்டு நினைவு நாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு வாக்குறுதிக்கான பத்தாம் ஆண்டு நினைவு நாள் வாழ்த்துக்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Modi ,Minister ,Mano Thangaraj ,Chennai ,Mano Tangaraj ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...