×

3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: திமுகவிடம் திருமாவளவன் கோரிக்கை!!

சென்னை: 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று பல்முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன்;

3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கொள்கை சார்ந்து இயங்கும் திமுக கூட்டணி, இந்தியா வரை விரிவடைந்து இந்தியா கூட்டணியாக உருவெடுத்துள்ளது. 4 தனித் தொகுதிகளை கொடுத்து அதில் 3 தொகுதிகளை கேட்டுள்ளோம். சிதம்பரம், விழுப்புரம், காஞ்சி, திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. என்று திருமாவளவன் கூறினார்.

 

The post 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: திமுகவிடம் திருமாவளவன் கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,DMK ,CHENNAI ,Visika ,Dinakaran ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு