×

திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்கக் கோரியுள்ளோம்: ஐ.யூ.எம்.எல் கட்சியின் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்கக் கோரியுள்ளோம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையினை திமுக முன்னெடுத்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடனான பேச்சு வார்த்தை என்பது ஒவ்வொரு கட்சிகளுடனும் நடைபெற்று வருகிறது. தற்போது திமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தையினை நடத்தியது.

ஐ.யூ.எம்.எல் கட்சியின் சார்பில் 2 தொகுதிகள் விருப்பப்பட்டியலாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராமநாதபுரத்தில் மீண்டும் ஐ.யூ.எம்.எல் போட்டியிடுவதற்கான விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அதே போன்று மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியினையும் ஐ.யூ.எம்.எல் திமுகவுடன் சேர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின் போது ஐ.யூ.எம்.எல் கட்சியினுடைய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன், பொதுச்செயலாளர் அபு பக்கர், ஷாஜகான், அப்துல் பாசித் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் வருகை தந்தனர்.

இந்த 4 பேர் கொண்ட குழுவினரோடு திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை குழு ஆலோசனையினை மேற்கொண்டனர். டி.ஆர்.பாலு தலைமையிலான இந்த ஆலோசனை குழு ஒவ்வொரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஐ.யூ.எம்.எல். கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில் ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அதில் அவர் கூறியதாவது, திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்கக் கோரியுள்ளோம். முதலமைச்சரிடம் கலந்து பேசிய பின் தேதி தெரிவிக்கப்படும். அப்போது தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் எனவும் கூறினார்.

The post திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்கக் கோரியுள்ளோம்: ஐ.யூ.எம்.எல் கட்சியின் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dimuka Coalition ,U. ,M. Qadar Moeen ,General Secretary ,L Party ,Chennai ,Dimuka Alliance ,India Union Muslim League ,General ,Gadar Moitin ,Indian Union Muslim League ,
× RELATED தமிழ்நாடு ஜனநாயகத்தை...