×

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லை என்பது உண்மைதான்: தனித்து போட்டியிடுவதாக கார்கே அறிவிப்பு

லூதியானா: ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லை என்பது உண்மைதான். அதனால் சில மாநிலங்களில் தனித்து போட்டியிடுவதாக கார்கே அறிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிவிட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். பஞ்சாப், டெல்லியில் காங்கிரசுடன் ஆம்ஆத்மி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்காது என்றும், தனித்து போட்டியிடுவதாக ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்துவிட்டார்.

மகாராஷ்டிராவில் 23 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக திரிணாமுல் தலைவர் மம்தா அறிவித்துள்ளதார். இவ்வாறாக ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால், இக்கூட்டணி குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாபின் லூதியானாவில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பேசுகையில், ‘சில மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லை என்பது உண்மைதான். கூட்டணி வேண்டும் என்று விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லை என்றால் பிரச்னை ஏதுமில்லை. ‘இந்தியா’ கூட்டணியில், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறிவிடமுடியாது. ஒருமித்த கருத்து இல்லாத தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். இந்த முடிவு பஞ்சாபிற்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் இதே முடிவுதான்’ என்று கூறினார்.

The post ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லை என்பது உண்மைதான்: தனித்து போட்டியிடுவதாக கார்கே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Kharge ,Ludhiana ,Gharke ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,United Janata Dal ,Uttar Pradesh ,Congress ,Karke ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....