×

அங்கன்வாடியில் வேலை தருவதாக கூறி 20 பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த சேர்மன் கும்பல்: ராஜஸ்தான் பேரூராட்சியில் நடந்த கொடூரம்

சிரோஹி: ராஜஸ்தானில் அங்கன்வாடியில் வேலை தருவதாக கூறி 20 பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த சேர்மன் மற்றும் அவரது கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி பேரூராட்சி தலைவர் மகேந்திர மேவாடா மற்றும் முன்னாள் கமிஷனர் மகேந்திர சவுத்ரி ஆகியோரை கடந்த சில மாதங்களுக்கு முன் பெண்கள் சிலர் அங்கன்வாடியில் தங்களுக்கு பணிவேண்டி சந்தித்தனர். அவர்களுக்கு அங்கன்வாடியில் வேலை ஏற்படுத்தித் தருவதாக சேர்மனும், முன்னாள் கமிஷனரும் கூறினர்.

பின்னர் அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்கள் கொடுத்த உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த 20 பெண்களையும், பேரூராட்சி தலைவர், முன்னாள் கமிஷனர், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். சில மணி நேரம் கழித்து விழித்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியே சொல்லாமல் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். சில வாரங்கள் கழித்து 20 பெண்களில் ஒரு பெண் மட்டும், தனக்கு நேர்ந்த கூட்டு பாலியல் பலாத்காரம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யாததால், பாதிக்கப்பட்ட பெண்களில் 8 பெண்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அங்கன்வாடியில் வேலை ஏற்படுத்திக் கொடுப்பதாக பேரூராட்சி தலைவர் கூறியுள்ளார். அதற்காக தலா ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பெண்கள் தங்களால் அந்த தொகையை தரமுடியாது என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்களை உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் சம்மதிக்காததால் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தருவதாக கூறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post அங்கன்வாடியில் வேலை தருவதாக கூறி 20 பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த சேர்மன் கும்பல்: ராஜஸ்தான் பேரூராட்சியில் நடந்த கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Rajasthan ,Sirohi ,Sirohi Municipality ,Mahendra Mewada ,Commissioner ,Mahendra ,Rajasthan Municipality ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது