×

நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தள பதிவில்; இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் – திட்டங்களையும் தந்த நம் பெருமைமிகு தமிழ்நாடு சட்டபேரவையின், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் – சக அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்றோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சீரிய தலைமையாலும், நிர்வாகத்திறனாலும், ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி வெற்றி நடைபோடுகிற நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள். 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக திகழும் நம் சட்டப்பேரவையால் நம் திராவிட மாடல் அரசு தயாரித்த ஆளுநர் உரை ஒரு மனதாக ஏற்கப்பட்டது. வாழ்க தமிழ்நாடு என்று பதிவிட்டுள்ளார்.

 

The post நம் திராவிட மாடல் அரசின், பல்துறை சாதனைகளைக் கொண்ட ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அவர்கள் வாசித்தார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : President of the Council ,Dravitha ,Minister Assistant Minister ,Stalin ,Chennai ,Minister ,Udayaniti Stalin ,government ,Minister Assistant Secretary ,Union of India ,
× RELATED திராவிட மாடல் அரசின் சீரிய...