×

உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதிய உணவு

 

தஞ்சாவூர்,பிப்.12: உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு ஒரத்தநாடு ஜேசிஐ, பிச்சை பவுண்டேஷன் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஜே.சி.ஐ ஒரத்தநாடு தலைவர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட்ராஜ், பிச்சை பவுண்டேசன் செயலாளர் வெற்றிச்செல்வன், தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தலைவர் ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள், அவர்களது உறவினர்களுக்கு உணவு மதிய உணவு வழங்கப்பட்டது. வாரந்தோறும் இதேபோல் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதிய உணவு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Medical College Hospital ,World Patient Day ,Thanjavur ,World Patients' Day ,Orathanadu JCI ,Pichai Foundation ,Cauvery Delta Farmers' Association ,Cancer Radiotherapy Center.… ,Dinakaran ,
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...