×

வருசநாடு பகுதியில் சீசன் தொடக்கம் இலவம் பிஞ்சு, பஞ்சிற்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

வருசநாடு, பிப். 12: வருசநாடு, மயிலாடும்பாறை பகுதியில் இலவம் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது இலவம் பிஞ்சு சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ளது. காய்ந்த இலவம் பிஞ்சுவின் விலை கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருப்பு வைத்திருந்த இலவம் பிஞ்சுவின் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.

தற்போது இலவம்பஞ்சு கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் கடந்த ஆண்டு சேகரித்து வைத்த இலவம் பஞ்சு விலை குறைவால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளியூர்களில் இருந்து யாரேனும் இடைத்தரகர்கள் வந்தாலும் அவர்களை அனுமதிப்பதில்லை.

இவ்வாறு குறைந்த விலையில் இலவம் பிஞ்சு மற்றும் பஞ்சினை வாங்கி அதனை மொத்தமாக பெரிய குடோன்களில் பதுக்கி வைத்து குறிப்பிட்ட மாத இடைவெளிக்கு பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்து இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். எனவே, வருடம் முழுவதும் கடுமையாக உழைக்கும் விவசாயிகளை விட இடைத்தரகர்களுக்கு அதிக லாபம் சென்றடைகிறது. எனவே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்படி இலவம் பிஞ்சு மற்றும் பஞ்சிற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு பகுதியில் சீசன் தொடக்கம் இலவம் பிஞ்சு, பஞ்சிற்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Mayiladumparai ,Dinakaran ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு