×

இன்று முதல் தங்கபத்திரம் விற்பனை

 

சிவகங்கை, பிப்.12: இன்று முதல் 5 நாட்களுக்கு அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட உள்ளது. சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் மாரியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசு தங்க பத்திர திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திர விற்பனை 12.2.2024 முதல் 16.2.2024 வரை சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் நடைபெறுகிறது.

ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கபத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.6ஆயிரத்து 263 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி 6மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையும் அல்லது 99436 00959 என்ற செல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இன்று முதல் தங்கபத்திரம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Kota Post Office ,Mariyappan ,Union Government ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்