×

வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி

 

மதுரை, பிப். 12: தே. கல்லுப்பட்டி அருகே வேளாண் இறுதியாண்டு மாணவிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி வட்டாரம் குமராபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

பயிற்சியில் வேளாண் உயர் அலுவலர்கள் விமலா, பாண்டி, ஹேமலதா மற்றும் பாண்டீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உழவன் செயலி குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்கினர். பயிற்சியில் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தினை மேற்கொண்டுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் ஈஸ்வரி, லதா,

தாரணி, இலக்கியா, தனுஷ்யா, பூமிகா, பரணி, டயானா, சோனி, டாஃப்னி பெரிசா விதை கடினப் படுத்துதல் தொழில்நுட்பத்தினை செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை குறித்தும் அதன் சிறப்பம்சங்களான விதை, இடுபொருட்கள் இருப்பு நிலை, மானியத் திட்டங்கள் குறித்த பல்வேறு பயனுள்ள தகவல்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.

The post வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kallupatti ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...