×

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம் வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில்

 

வேலூர், பிப்.12: வேலூர் மாவட்டத்தில் இன்று 80 மையங்களுக்கு பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம்தேதி தொடங்கி 22ம்தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ம்தேதி தொடங்கி 25ம்தேதி வரையும், 10ம்வகுப்பு ேதர்வு மார்ச் 26ம்தேதி தொடங்கி ஏப்ரல் 6ம்தேதி வரையும் நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (12ம் தேதி) தொடங்கி வரும் 24ம்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 80 தேர்வு மையங்களில் இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. இதில் பிளஸ்2 வகுப்புக்கான செய்முறை தேர்வை 6 ஆயிரத்து 196 மாணவர்களும், 7 ஆயிரத்து 708 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 904 பேர் எதிர்கொள்கின்றனர். பிளஸ்1 வகுப்புக்கான செய்முறை தேர்வை 7 ஆயிரத்து 857 மாணவர்களும், 8 ஆயிரத்து 553 மாணவிகளும் எதிர்கொள்கின்றனர்.
பாடவாரியாக காலை மற்றும் மாலை வேளைகளில் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. செய்முறை தேர்வுக்கான முகப்பு தாள்கள் மற்றும் படிவங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம் வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Tamil Nadu ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு