×

களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்

 

களக்காடு, பிப்.12: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம செய்தனர். களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 9ம் தேதி கோலாகலத்துடன் தொடங்கியது. முதல்நாளான்று சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் (10ம் தேதி) இரவில் களக்காடு வரதராஜபெருமாள் கோயில் தெப்ப திருவிழா இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு வரதராஜபெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து வரதராஜபெருமாள் தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பக்குளத்தின் நாலாபுறமும் நின்று வரதராஜபெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்தது. 3ம் நாளான நேற்று (11ம்தேதி) இரவில் சந்தானகோபால சுவாமி கோயில் தெப்ப திருவிழா நடந்தது.

 

The post களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Theppa Utsavam ,Kalakkadu Varadarajaperumal temple ,Kalakadu ,Theppa festival ,Varadarajaperumal Temple ,Kalakkad ,Thai ,Kalakadu Varadarajaperumal Temple ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...