×

கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 33 பேர் பிடிபட்டனர்

 

சென்னை, பிப்.12: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் சாலையில் நடந்து சென்ற பொது மக்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக 33 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், 3 லேப்டாப், ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் குற்றங்களை தடுக்கம் வகையில் மாநகர காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான 7 நாட்களில் செல்போன், தங்க சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் 2 இளஞ்சிறார்கள் உள்பட 29 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், ரூ.45 ஆயிரம் பணம், 3 லேப்டாப், ஒரு சைக்கிள், 10 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திருடியதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 இரு சக்கர வாகனம், 2 இலகு ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 33 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...