×

கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதிகளில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலங்களில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக தற்போதே காட்டுத்தீயின் வேட்டை துவங்கியுள்ளது. கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் வனப்பகுதி, பழநி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் காய்ந்த செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகின. இந்த திடீர் காட்டுத்தீயின் வேகம் மிக அதிகமாக இருந்தது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து, எதிர் திசையில் தீ வைத்து, சுமார் 5 மணி நேரம் போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சேதமடைந்த மரங்களின் மதிப்பு குறித்த விபரங்களை கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. கொடைக்கானலில் வறண்ட வானிலை தொடர்வதால், அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே வனப்பகுதி அருகே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகை பிடிப்பது, சமையல் ெசய்வது உள்ளிட்ட நடவடிக்ைககளில் ஈடுபட வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளனர்.

 

The post கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul district ,Godaikanal ,Kodiakanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து