×

பழைய இரும்பு சாமான் வியாபாரி போல அண்ணாமலை கூவினாலும் தமிழ்நாட்டுல போணியாகாது: பாலகிருஷ்ணன் விமர்சனம்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் சாதி மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது. ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற மதவெறி சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கொக்கரிப்பது இந்திய மக்களுக்கு ஆபத்தாக மாறிவிடும்.

பாஜ வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாடும் மோசமாக மாறிவிடும். அண்ணாமலை பழைய இரும்பு சாமான் வியாபாரி போல கூவி கூவி விற்றாலும் அவருக்கு தமிழ்நாட்டில் முகவரி இருக்காது. மக்களை பிளவுபடுத்தும் அரசியலை பயன்படுத்தி நாட்டை காப்பாற்றலாம் என்று பாஜக பார்க்கிறது. மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் பாஜகவினர் ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள்.

பிப்ரவரி 12 (இன்று) மற்றும் 13 ஆம் தேதிகளில் திமுகவுடன் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். பேச்சுவார்த்தையின் முடிவு சுமுகமாக அமையும். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், ஆளுநர்களால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது. ராமர் கோயிலுக்கு அழைக்காததால் அத்வானிக்கு ஆறுதல் பரிசாக பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்றார்.

The post பழைய இரும்பு சாமான் வியாபாரி போல அண்ணாமலை கூவினாலும் தமிழ்நாட்டுல போணியாகாது: பாலகிருஷ்ணன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Balakrishnan ,Singaravelar ,Communist Party of India ,District Collectorate ,Chennai ,India ,Annamalai ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...