- சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- சென்னை பெருநகர்
- வளர்ச்சி
- குழு
- தாளமுத்து நடராஜன் வீடு
- எழும்பூர்
- இந்து சமய அறக்கட்டளைகள்
- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழு
சென்னை: சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களான வடசென்னை வளர்ச்சித் திட்டம், குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனைய விரிவாக்கம், செங்கல்பட்டு பேருந்து முனையம், மாமல்லபுரம் பேருந்து முனையம், வெளிவட்டச் சாலை மேம்பாடு, சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு அங்காடியினை நவீன மயமாக்குதல், ஒருங்கிணைந்த கிழக்கு கடற்கரை மேம்பாடு உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் மறுவடிவமைப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை கேட்டுக்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் 12 உதவி பொறியாளர்களை தெரிவு செய்து பெயர்களை இக்குழுமத்திற்கு அனுப்பி வைத்ததன் அடிப்படையில், 12 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
The post சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு தேர்வு 12 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.