×

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவி ஏற்பு

ஷில்லாங்: மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று பதவி ஏற்று கொண்டார். மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த சஞ்சிப் பானர்ஜி கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து மேகாலயா உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலிஜியம் நவம்பர் 3ம் தேதி பரிந்துரைத்தது. இதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த 3ம் தேதி ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கோவையை சேர்ந்த எஸ்.வைத்தியநாதன் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பை முடித்து, 1986ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை வழக்கறிஞராக பணியாற்றினார். 2013 அக்டோபர் முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

The post மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : S.Vaidhyanathan ,Chief Justice ,Meghalaya High Court ,Shillong ,S. Vaithyanathan ,Sanjib Banerjee ,Meghalaya ,Chief Justice of ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...