×

கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.

கோவை: கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழ்நாட்டில் நேற்று 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், 6 லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த 2022 அக்டோபர் மாதம், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் பலியானார். இவருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை, என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே கைதான 6 பேர் உள்பட கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 13 பேரையும் என்ஐஏ அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கார் சிலிண்டர் வெடித்த வழக்கு சம்மந்தமாக இவர்களை அடிக்கடி காவலில் எடுத்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று என்ஐஏ அதிகாரிகள் சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 21 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், 6 லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இன்று கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

The post கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ. appeared first on Dinakaran.

Tags : N. I. Aw ,Govai ,Goa ,KOWAI ,TAMIL NADU ,Goa, N.Y. I. A. ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை