×

திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பெருமிதம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடைசியாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே நாகராஜா கோயிலில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருப்பணிக்காக சுமார் ரூ.1.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (11ம்தேதி) தொடங்கியது. திருப்பணிகளை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோயில் திருப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 100 கோயில்களில் திருப்பணிக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, சுமார் 400 ஆண்டுகளுக்கு பின் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தினோம். தற்போது குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவராத்திரி விழாவையொட்டி, சிவாலயங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. 12 சிவாலயங்களிலும் திருப்பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

The post திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Nagaraja Temple ,Nagarkovo ,Kumbabishekam ,Chief Minister ,Mu. K. Stalin ,Dimuka ,Minister ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்