×

மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை

மும்பை: மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமெரிக்க துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி அமெரிக்க தூதரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தை ஆய்வு செய்தனர். விசாரணையில் போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவோம் என்று அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து மிரட்டல் இ-மெயில் வந்தது. இதுகுறித்து பாந்த்ரா குர்லா போலீசார், ஐபிசி 505 (1) (பி) மற்றும் 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். rkgtrading777@gamil.com என்ற முகவரியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை அமெரிக்காவில் இருந்து தப்பியோடிய குடிமகன் என்றும், அனைத்து அமெரிக்க தூதரகங்களையும் தகர்த்து விடுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

The post மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : US ,embassy ,Mumbai ,American Consulate ,Bandra Kurla ,Mumbai, Maharashtra ,US Embassy ,
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...