- மண்டல தேர்தல் அலுவலர்கள்
- கோடகாஷிர்
- வரகுப்பை ஊராட்சி
- முசிறி
- மண்டல தேர்தல் அதிகாரிகள்
- முசிறி மாவட்டம்
- கலெக்டர்
- ராஜன்
- தேர்தல் ஆணையம்
முசிறி, பிப்.11: முசிறி கோட்டாட்சியர் கோட்டாட்சியர் ராஜன் தலைமையில் நடைபெற்ற மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி சிறப்பாக நடத்தி முடிக்க அலுவலர்கள் தேவையான அனைத்து பயிற்சிகளையும் பெற்றிருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முசிறி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜன் தலைமை வகித்தார். முசிறி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக், தேர்தல் நேரத்தில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார். மண்டல அலுவலர்களுக்கு முசிறி தொகுதியில் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட பகுதியின் வாக்குப்பதிவு மையங்கள் அடங்கிய பட்டியல் மற்றும் வரைபடம் வழங்கப்பட்டது.
அலுவலர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள வாக்குபதிவு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு, மின்வசதி , கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவை முறையாக உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி சிறப்பாக நடத்தி முடிக்க அலுவலர்கள் தேவையான அனைத்து பயிற்சிகளையும் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக தேர்தல் அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்தல் துணை வட்டாட்சியர் கவிதா நன்றி கூறினார்.
The post வரகுப்பை ஊராட்சியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.