×

வீரராகவபுரத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

கும்பகோணம், பிப்.11: கும்பகோணம் அருகே வீரராகவபுரத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் தேர் பவனி விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த மாத்தூர் பங்கு, வீரராகவபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 11ம் ஆண்டு தேர் பவனி விழா, கடந்த 1ம்தேதி இரவு 8 மணிக்கு, மாத்தூர் பங்கு தந்தை அருள்சாமி, உதவி பங்கு தந்தை அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

பல வண்ண மின் விளக்குகளாலும், நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் புனித ஆரோக்கிய அன்னை, சம்மனசு மற்றும் சூசையப்பர், ஆடம்பர தேரில் எழுந்தருள தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

The post வீரராகவபுரத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி appeared first on Dinakaran.

Tags : Mother of ,Temple Ter ,Veeraragapura ,Kumbakonam ,Ter Bhavani ,Holy Mother of Health Temple ,Matoor ,Nachiyar Temple ,Veerakarakapuram ,Holy Mother ,of ,Ter ,Bhavani ,
× RELATED 509 ஆண்டுகள் பழமையான புனித மகிமை மாதா திருத்தல பெருவிழா