×
Saravana Stores

நாகப்பட்டினத்தில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த ஆயத்த கூட்டம்

நாகப்பட்டினம்,பிப்.11: ஜாக்டோ -ஜியோ சார்பில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), ரவி (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), முத்துசாமி (தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை வகித்தனர். புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் அந்துவன்சேரல் வரவேற்றார். ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ராணி தொடக்க உரையாற்றினார். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்காலத்தை வரண்முறை செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக வரைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் 90 சதவீத ஆசிரியர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி முதல் கட்டமாக ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவது. இரண்டாம் கட்டமாக வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பமு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ரமேஷ், குமார்(தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), பாலசண்முகம் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), புயல்குமார்( தமிழக ஆசிரியர் கூட்டணி), சித்திரா( தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), செங்குட்டுவன்(முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), செந்தில்வேலன் (தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), ஜோதி லட்சுமி ( சத்துணவு ஊழியர் சங்கம்), சண்முகம் ( அனைத்து மருந்தாளுநர் சங்கம்), வளர்மாலா( ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்), ரமேஷ் (சாலைப் பணியாளர்கள் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் பேசினர். ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் நிறைவுரையாற்றினார்.

The post நாகப்பட்டினத்தில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Jacto Jio ,Nagapattinam ,Jacto-Jio ,Nagapattinam Government Employees Union Building ,Anbazhakan ,Tamil Nadu Government Employees Union ,Ravi ,Tamil Nadu Primary School Teachers Association ,Muthusamy ,
× RELATED சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக்...