×

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விளக்க கூட்டம்

நாகப்பட்டினம்,பிப்.11: அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் நாகப்பட்டினம் நடராசன் தமயேந்தி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வெளிப்பாளையம் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மரியஜோசப், நாகூர் கௌதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மதுஅலி, நாகப்பட்டினம் சிஎஸ்ஐ பட்டதாரி ஆசிரியர் விஜிமனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் பேசினார். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வழங்கும் உதவித்தொகையை வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் காலை உணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான சலுகைகள் அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் ரூஸோ, சுப்பிரமணியன், தரன், சொக்கநாதன், ரத்தினம், பாலசண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிதுரை நன்றி கூறினார்.

The post அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Federation ,of Government Aided School Teachers ,Briefing ,Nagapattinam ,Government Aided Minority and Non-Minority School Teachers Association ,Nagapattinam Natarasan Thamayendi High School ,Manjakkollai Kumaran High School ,Headmaster ,Balasubramanian ,Uppalayam ,Government ,Aided ,School ,Teachers Federation ,Explanation ,Dinakaran ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்