×

மாணவர்களின் கனவை நனவாக்க முதல்வரை நேரில் சந்திக்க திட்டம்: முன்னாள் துணைவேந்தர் தகவல்

 

காரைக்குடி, பிப். 11: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் வடிவாம்பாள் வரவேற்றார். கல்விக்குழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ‘‘விருதுகள் பெரிய தன்னம்பிக்கை தரும் என்பதால் அதற்காகவே தனி விழா நடத்துகிறோம். மேலும் முன்னேற்றம் அடைவதற்கு நாம் பெரும் பரிசுகள் உதவியாக இருக்கும்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் போது தான் நம்மிடம் உள்ள திறமைகள் நமக்கு தெரியவரும். எனவே மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகிறோம். மாணவர்கள் என்னவாக விரும்புகின்றனரோ, அந்ததுறைக்கு நேரடியாக அழைத்து சென்று ஊக்கப்படுத்தி வருகிறோம். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் வருங்காலத்தில் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகவேண்டும் என விருப்பங்களை தெரிவித்துள்ளனர். எனவே அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களை ஊக்குவிப்பதில் ஆசிரியர்களுக்கு இணையாக பெற்றோர்களின் பங்கும் உள்ளது. நம்மால் முடியும் என்ற எண்ணத்தை, நாம் மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகநாதன், டாக்டர் மணிகண்டன், மத்திய மின் வேதியியல் ஆய்வக முதன்மை விஞ்ஞானி அங்கப்பன், பிஎச்இஎல் ஓய்வு பெற்ற பொதுமேலாளர் ஆன்ரோ, நரம்பியல் நிபுணர் காம்ளே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களின் கனவை நனவாக்க முதல்வரை நேரில் சந்திக்க திட்டம்: முன்னாள் துணைவேந்தர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Amaravathiputur Srirajarajan CBSE School ,Vadivambal ,Board of Education ,Prof. ,Subbiah ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க