×

ஆதிதிராவிடர்களுக்கான தென்னை சாகுபடி மதிப்புக்கூட்டுதல் பயிற்சி முகாம்

 

ஈரோடு,பிப்.11: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள வன விரிவாக்க மையத்தில் மத்திய பண்ணை ஆராய்ச்சி மையம் மற்றும் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து ஆதிதிராவிடர்களுக்கான தென்னை சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு மத்திய பண்ணை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் ஹெப்பர் தலைமை தாங்கினார்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார். மத்திய பண்ணை ஆராய்ச்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அகஸ்டின் ஜெரால் பங்கேற்று தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் அதன் விரிவாக்க யுக்திகள் பற்றி விளக்கினார். பயிர் உற்பத்தி பிரிவின் தலைவர் முனைவர் சுப்பிரமணியம் பங்கேற்று தென்னை சாகுபடியில் தொழில்நுட்பம் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை விஞ்ஞானி பச்சியப்பன் பங்கேற்று தென்னை சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கினார்.

பண்ணை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி முனைவர் மணிகண்டன் பங்கேற்று தென்னையில் மதிப்புக்கூட்டுதல் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.  சமூக அறிவியல் பிரிவு தலைவர் முனைவர் பொன்னுசாமி தென்னை சாகுபடியில் விரிவாக்க அணுகுமுறை பற்றி விளக்கம் அளித்தார். முடிவில், வேளாண் அறிவியல் நிலைய மனையியல் விஞ்ஞானி சிவா நன்றி கூறினார். இந்த முகாமில், 150க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர்களுக்கான தென்னை சாகுபடி மதிப்புக்கூட்டுதல் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Southern Cultivation Appreciation Training Camp ,Aadiraviders ,Erode ,Central Farm Research Centre ,District Agricultural Science Centre ,Southern Cultivation and Valuation ,Adiravids ,Forest Extension ,Centre ,Arachalur, Erode District ,Southern Cultivation Appreciation Training Camp for Aadiraviders ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...