×

காந்திகிராம பல்கலை.யில் கைவினை உடை தயாரிப்பு பயிற்சி முகாம்

நிலக்கோட்டை, பிப். 11: திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், காந்திகிராம பல்கலைக்கழக மனையியல் துறை, திண்டுக்கல் கை சித்திர தையல் கைவினைகள் தயாரிப்பாளர் நிறுவனம் ஆகியவை இணைந்து சித்திர தையல் கைவினையர்களின் செயல் முறை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கை சித்திர தையல் கைவினைகள் தயாரிப்பாளர் நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். மனையியல் துறை தலைவர் புஷ்பா, பல்கலைக்கழக பேஷன் டெக்னாலஜி துறை இயக்குனர் சத்யா, தொழில் துறை பேராசிரியர் ராஜா பிரான்மலை கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து சித்திர தையல் தொழில் வாய்ப்புகள், பெண்கள் உடைகள் வடிவமைப்புகள், மதிப்பு கூட்டு முறைகள், சந்தைப்படுத்துதல், தொழில் முதலீட்டுக்கான வழிமுறைகள் குறித்த பயிற்சியும், செயல் முறையும் அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சித்திர தையல் மூலம் ஆடைகளை வடிவமைத்தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பானு சித்ரா நன்றி கூறினார்.

The post காந்திகிராம பல்கலை.யில் கைவினை உடை தயாரிப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Gandhigram University ,Nilakottai ,Dindigul ,Ministry of Textiles ,Department of Architecture ,Dindigul Handicrafts and Handicrafts Manufacturing Institute ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்