×

(தி.மலை) பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஆதார் அட்டைக்கு தாசில்தார் கையொப்பம் இடாததால்

 

சேத்துப்பட்டு, பிப்.11: ஆதார் அட்டைக்கு தாசில்தார் கையொப்பம் இடாததால் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் 35 பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆதாரம் இல்லாத பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி, சேத்துப்பட்டு தாலுகாவில் நடந்த முகாமில் 35 பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் விவரங்களுடன் ஆதார் அட்டை எடுப்பவரின் புகைப்படம், தாசில்தாரின் கையொப்பம்யிட தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பெற்றவர்கள் அதனை பூர்த்தி செய்து நேற்று முன்தினம் தாசில்தார் வெங்கடேசனை அணுகி கையொப்பம் கேட்டுள்ளனர். அதற்கு தாசில்தார் பிறப்பு சான்றிதழ் உள்பட எந்த ஆதாரமும் இல்லாமல் நான் எப்படி கையொப்பமிட முடியும் என கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 35 பழங்குடியின மக்கள் நேற்று மாவட்ட எஸ்சி எஸ்டி ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் குடும்பத்துடன் தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தி அனைத்து விண்ணப்பத்திலும் கையொப்பமிட்டார். மேலும், நேரம் கடந்ததால் அவர்கள் அனைவருக்கும் நாளை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தனியாக ஆதார் அட்டை பதிவு செய்ய முகாம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்றி அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த வீடியோ கட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இச்சம்பவம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post (தி.மலை) பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஆதார் அட்டைக்கு தாசில்தார் கையொப்பம் இடாததால் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,taluk ,Chetupatta ,Chetupatta taluk ,tahsildar ,Tiruvannamalai district ,T.Malaya ,Dinakaran ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்