×

(தி.மலை) விவசாயிகளுக்கு கண்டுணர்வு சுற்றுலா விருதாச்சலம் அழைத்து செல்லப்பட்டனர் ஆரணி வட்டாரத்தை சேர்ந்த

 

ஆரணி, பிப்.11: ஆரணி வட்டார விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக விருதாச்சலத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆரணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் எண்ணெய்வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து மாநிலத்திற்குள் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க திண்டிவனம் மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையங்களுக்கு தேர்வு செய்து கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்வார்கள்.

அதன்படி, வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பா ஆலோசனையின்படி, தொழில்நுட்ப மேலாளர் சுகுமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் சரவணன் தலைமையில் ஆரணி வட்டாரத்தில் உள்ள 50 விவசாயிகள் விருதாச்சலத்துக்கு நேற்று முன்தினம் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கேப்சன். விருதாச்சலத்தில் கண்டுணர்வு சுற்றுலா மேற்கொண்ட ஆரணி வட்டார விவசாயிகள்.

The post (தி.மலை) விவசாயிகளுக்கு கண்டுணர்வு சுற்றுலா விருதாச்சலம் அழைத்து செல்லப்பட்டனர் ஆரணி வட்டாரத்தை சேர்ந்த appeared first on Dinakaran.

Tags : Th ,. Malai ,Kandanuvu Tourism Awards ,Arani ,Vrudhachalam ,Dindivanam ,Th. Malai ,Arani district ,Kantunhu ,Award ,Agricultural ,Technology ,Management Agency ,Dinakaran ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்